உள்ளூர் செய்திகள்
சிவகாசியில் வீடு இடிந்து தொழிலாளி பலி
சிவகாசியில் வீடு இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொத்தநேரியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு அங்கு தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் தாழி குளத்துப்பட்டியை சேர்ந்த பூபதிராஜன் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் கருப்பையாவுக்கு சொந்தமான வீடுகள் சேதமடைந்தன. எனவே அந்த வீடுகளில் மராமத்து பணி மேற்கொள்ள திட்டமிட்டார்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை தொகுப்பு வீடுகள் இடிந்தது.
இதில் பூபதிராஜன் மகன் அஜித் குமார் (வயது 23) இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.