உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரசபை கூட்டம் இன்று நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்றத்தின் முதல்தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மல்லிகா, துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர் தங்கம் ரவிகண்ணன் அறிமுக உரையாற்றும் பொழுது சொத்துவரி குறித்து மன்றத்தின் தீர்மானத்தினை அரசுக்கு அனுப்புவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப் பட்டுள்ளது. அடுத்த கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெறும். நமக்கு கிடைத் துள்ள பதவி என கருதாமல் பொறுப்புணர் வுடன் பொது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு என நாம் அனைவரும் நினைத்து செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் 69 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அவை உறுப்பினர்களின் ஏகமன தான ஆதரவோடு நிறை வேறியது. நகர்மன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பல்வேறு கோரிக்கைகளுக்கு நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் பதிலளித்து பேசும்போது, நிதிநிலைமை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
நகராட்சி எந்த இடத்தில் தவறு நேர்ந்தாலும் நிச்சய மாக பாரபட்சமின்றி நடவ டிக்கை எடுக்கும். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். நகராட்சி அலுவலர்கள் அந்தந்த பகுதி மக்கள் பணி செய்ய வார்டுகளுக்குள் செல்லும் போது அவசியம் உறுப்பினர்கள் கவனத்திற்கு தெரிவித்து இணைந்து மக்கள் பணி செய்ய வேண்டும்.
நகரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது வாரம்தோறும் நகரில் குறிப்பிட்ட ஒரு வார்டை தேர்வு செய்து அங்கு முழுவீச்சில் துப்புரவு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதை அறிவீர்கள். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்படும். நகராட்சி நிர்வாகமும் பொதுமக்கள் சேவைக்கு முன்னுரிமை தந்து செயல்படும் என்றார். துணைத்தலைவர் செல்வமணி நன்றி கூறினார்.