உள்ளூர் செய்திகள்
முகாமினை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்த பார்வையிட்ட போது எடுத்த படம்.

நியாய விலைக்கடை பணியாளர்கள் மருத்துவமுகாமை உரிய முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும்

Published On 2022-04-10 15:27 IST   |   Update On 2022-04-10 15:27:00 IST
நியாய விலைக்கடை பணியாளர்கள் மருத்துவமுகாமை உரிய முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
அரியலூர்:

 தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியாய விலைக்-கடைப் பணியாளர்களுக்கு நடை பெற்ற முழு உடல் பரிசோதனை முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி பார்வையிட்டார்.  

பின்பு அவர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில் 263 முழு நேர நியாய விலைக்கடைகளும், 184 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் 210 விற்பனையாளர்களும், 12 இதர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை, இதய நோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேவைப்படும் நபர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மேல் சிகிச்கைக்கு பரிந்துரை செய்யப்படும். 

இம்முகாமில் தினமும் 25 பணியாளர்கள் வீதம் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே. இம்மருத்துவ முகாமினை கூட்டுறவுத்துறை பணியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என  கலெக்டர் தெரிவித்தார்.

Similar News