உள்ளூர் செய்திகள்
அ.ம.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

அ.ம.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம்

Published On 2022-04-10 12:59 IST   |   Update On 2022-04-10 12:59:00 IST
ஜெயங்கொண்டத்தில் அ.ம.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.ம.மு.க. செயற்குழுக்கூட்டம் துரை மணிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.  

கூட்டத்தில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சிவகனகசபை, கோகுல் பாலாஜி, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். 

முன்னதாக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சந்திரமோகன்  வரவேற்றார். கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 

மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டுமென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

கூட்டத்தில் வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயலாளர் ராஜாராம், மாவட்ட மாணவரணி தலைவர் திருக்குமரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இளவழகன், நகர செயலாளர் முரளி மற்றும் பலர் பங்கேற்றனர். 

முடிவில் மாவட்ட கழக துணை செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.

Similar News