உள்ளூர் செய்திகள்
25 கிலோ பட்டாசு பறிமுதல்- 3 பேர் கைது
விருதுநகர் அருகே 25 கிலோ பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (வயது 40), கிருஷ்ணசாமி (57). இவர்கள் இருவரும் அனுமதியின்றி 25 கிலோ உதிரிபட்டாசுகள், 30 சரவெடிகள், வெடி தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் அதனை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த செந்தில்குமார் அனுமதியின்றி 38 குரோஸ் கருந்திரிகளை வைத்திருந்ததாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.