உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை உடனடியாக அகற்ற ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலக கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில், துணை தலைவர் அசோகன் முன்னிலையில் நடைபெற்றது, மாவட்ட ஊராட்சி குழு அலுவலக செயலாளர் கபிலன் வரவேற்று பேசினார்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, ஷகிலா தேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனலட்சுமி, கீதா, புள்ளியியல் அலுவலர் முகிலன், இளநிலை உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
இக்கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் தனியார் சிமெண்ட் ஆலைகள் ஏரி, குட்டை, குளம், அரசு புறம்போக்கு போன்ற ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும், ஏரி குளங்களில் உள்ள வேலிக்கருவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.