உள்ளூர் செய்திகள்
அம்பேத்கார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி
அம்பேத்கார் பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 19ந் தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
விருதுநகர்
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, 19-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டஅரங்கில் நடக்கின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000 , 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் பேச்சுத்திறனை சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் 2பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000 என்ற வீதத்தி-லும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டு வருகிறார் எனமாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.