உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 30 பவுன் நகைகள் மாயமானது.
விருதுநகர்
சாத்தூர் காமாட்சி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(வயது 42). இவர் குடும்பத்தினருடன் உறவினர் இல்லத்திருமணத் துக்கு சென்று திரும்பினார்.
அதன்பிறகு அவரது மனைவி தனது 30பவுன் நகைகளை பீரோவில் வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த நகைகள் திடீரென மாயமாகிவிட்டன.
இதுகுறித்து சாத்தூர் டவுன்போலீசில் விக்னேஸ்வரன் புகார் செய்தார். அதில், வீட்டை சுத்தப் படுத்து வதற்காக கார்த்தி என்ற பெண்ணையும், ஜோதி என்பவரையும் அழைத்து வந்ததாகவும், இவர்கள் தான் நகையை திருடியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு காமிரா பதிவை ஆய்வு செய்தபோது காலையில் வேலைக்கு வந்தஜோதி வெறும் கையுடன் வருவதும், திரும்பிச் செல்லும் போது ஒரு பையை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்காட்டை பாலையம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (53). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 30 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.