உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த மாடு பத்திமாக மீட்பு
ஒரத்தநாடு அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தன்.
விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு பசுமாடு உள்ளது. வழக்கம்போல் பசு மாடு மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.
அப்போது அதே பகுதியில் இருக்கும் 20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பசுமாடு திடீரென தவறி விழுந்தது.
இதுகுறித்து நித்தியானந்தா உடனே ஒரத்தநாடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.