உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11.75 லட்சம் மோசடி

Published On 2022-03-20 06:04 GMT   |   Update On 2022-03-20 07:57 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11.75 லட்சம் மோசடி சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் :

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் காளைப் பட்டியை அடுத்த சின்னாண்டி பட்டியைச் சேர்ந்தவர் தாமஸ்ஆல்பர்ட் (வயது40). தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்த நல்லகவுண்டம் பாளையம் குருமாந்தூர் சந்தையை,  தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் ஆனந்தகுமார் (48). பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 இவர் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சரின் உறவினர் எனக்கூறி , தாமஸ் ஆல்பர்ட்டிடம்  அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய தாமஸ்ஆல்பர்ட் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி ரூ.7.10 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் ராஜா ரூ.1 லட்சம், சுரேஷ் ரூ.1.10 லட்சம், மருதமுத்து ரூ.2.55 லட்சம் என மொத்தம் ரூ.11.75 லட்சம் வழங்கியுள்ளனர்.

இந்நிலையயில்   ஆனந்தகுமார் யாருக்கும் வேலை வாங்கி தராத நிலையில் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்தனர். 

இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் தாமஸ் ஆல்பர்ட் அளித்த புகாரின்பேரில் ஆனந்தகுமார் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்  அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News