உள்ளூர் செய்திகள்
திமுக

நாமக்கல் நகராட்சியில் வெற்றிபெற்ற ஒரே ஒரு அ.தி.மு.க. கவுன்சிலரும் தி.மு.க.வில் இணைந்தார்

Published On 2022-03-03 06:23 GMT   |   Update On 2022-03-03 06:23 GMT
நாமக்கல் நகராட்சியை பொறுத்தவரை இருந்த ஒரு கவுன்சிலரையும் அ.தி.மு.க. இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 39 வார்டுகளில், தி.மு.க. 36 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றனர். ஏற்கெனவே தி.மு.க. ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 22, 25-ஆவது வார்டு உறுப்பினர்கள் தனசேகரன், ஸ்ரீதேவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.

இந்த நிலையில் 29-ஆவது வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற ரோஜா ரமணி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ. .ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதன்மூலம் 39 வார்டுகளிலும் தி.மு.க. முழு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் தி.மு.க.வில் இருந்த ரோஜா ரமணி, தனக்கு 29-ஆவது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால், அ.தி.மு.க.வில் இணைந்து தேர்தலை சந்தித்தார். இங்கு ரோஜா ரமணி 688 வாக்குகளும், அவரை எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் 487 வாக்குகளும் பெற்றனர். 191 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா ரமணி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் நகராட்சியை பொறுத்தவரை இருந்த ஒரு கவுன்சிலரையும் அ.தி.மு.க. இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News