உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

சோலூர் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2022-02-26 16:06 IST   |   Update On 2022-02-26 16:06:00 IST
மார்ச் 4-ந் தேதி திருவிழா தொடங்குகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சோலூர் பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  திருவிழாவுக்கு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் ஊட்டி, கூடலூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா எளிமை யான முறையில் உள்ளூர் பக்தர்களை கொண்டு நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடக் கிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

7-ந் தேதி இரவு 10 மணிக்கு மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. இறுதி நாளான, 8-ந் தேதி காலை 8.45 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கூடலூர், ஊட்டியில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Similar News