உள்ளூர் செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை முயற்சி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜசேகர் (வயது50). ஆட்டோ டிரைவர். இவரது மகளை அதே சிறுவாச்சூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் அருண் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இது சம்பந்தமாக ராஜசேகர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இருதரப் பினைரையும் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக அனுப்பி வைத்தனர்.
சிறுவாச்சூரை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் (31) என்பவர் அவரது நண்பர் அருணை போலீஸ்ஸ்டேசனுக்கு அழைத்து சென்று அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என கூறி ராஜசேகர் குடும்பத்தினரை கடந்த ஆறு மாத காலமாக மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ராஜசேகர் தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேருடன் பெரம்பலூர் போலீஸ்ஸ்டேசனுக்கு வந்து அங்கு தனது குடும்பத்தினரை மிரட்டி வரும் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த முற்பட்டனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரம்பலூர் போலீஸ்ஸ்டேசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.