உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பெண் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்

Published On 2022-02-26 15:22 IST   |   Update On 2022-02-26 15:22:00 IST
பெண் போலீசாருக்கு புத்துணர்வு முகாம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்ஸ்டேசனில் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு புத்துணர்வு முகாம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு எஸ்.பி. மணி தலைமை வகித்து பேசுகையில், போலீஸ்ஸ்டேசனுக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துகூறினார். மேலும் பெண்கள் உதவி மைய இலவச தொலைப்பேசி எண்ணான 198-க்கு வரும் அழைப்புகளை எவ்வாறு கையாள வேண்டும் எனவும், குறைகளை கூறும் பொது மக்களிடம் நாம் அன்பாகவும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் பெண்கள் உதவி மைய போலீசார், 1098 நிர்வாகி திவ்யா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா, குழந்தை நல வாரிய தலைவர் அய்யம்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Similar News