உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க கோரி கலெக்டரிடம் மனு

Published On 2022-02-26 14:42 IST   |   Update On 2022-02-26 14:42:00 IST
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க கோரி பெரம்பலூர் கலெக்டரிடம் பெற்றோர்கள் கோரிக்கை
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் அரணாரை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை (எஸ்.பி.சி.ஐ.டி) போலீஸ் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர். இவரது மகன் கிருபா சங்கர் (வயது 21) சிறுவாச்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த  சிவக்குமாரின் மகன் நவநீதகிருஷ்ணன் (22).

பெரம்பலூரைச் சேர்ந்த அருண், வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகரைச் சேர்ந்த கண்ணனின் மகன் ரோகித், தீரன்நகரைச் சேர்ந்த ரத்தீஷ், ரோஸ் நகரைச் சேர்ந்த சவுமியா உள்ளிட்ட 10 பேர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவி நகரில் தங்கி அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சார்பில் கிருபா சங்கரின் தந்தை முருகானந்தம், நவநீத கிருஷ்ணனின் அண்ணன் விக்னேஷ் ஆகியோர் கண்ணீர் மல்க பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

இதே போல் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் தெற்கு இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மகன் தருண். குளித்தலை தாலுகா, திம்மாச்சிபுரம், மேலத் தெருவை சேர்ந்த சின்னதுரை&சுதா தம் பதியர்   மகன் சூரியா, மற்றும் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் 6&வது கிராசில் வசித்து வரும் ஆண்டனி கேப்ரியல் &கார்த்திகாயினி தம்பதி மகன் ஸ்ரீநிதி ஆகிய 3 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் மற்றும் ஏரோபேஸ் படித்து வருகின்றனர்.

இவர்களது பெற்றோர்கள் கரூர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில் :
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ஹீரோவ்பிராட்சி மெட்ரோ ரெயில் நிலையில் உள்ள சுரங்கப்பாதையில் மாணவர்கள், பொதுமக்கள் தங்கியுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவர்கள் உள்ளிட்ட தமிழக மாணவர்களும் அங்கு தங்கியுள்ளனர்.

எனவே மத்திய&மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கி உள்ள எங்கள் மாணவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடக்க வேண்டும் என்றனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Similar News