உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நீலகிரியில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு

Published On 2022-02-13 16:01 IST   |   Update On 2022-02-13 16:01:00 IST
நீலகிரி மாவட்டத்தில் 21 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வனக்கோட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனக்கோட்டம் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் உள்ள அணை கள், நீர்நிலைகளில் அரிய வகை பறவைகள், இடம்பெயர்ந்து வரும் பறவைகள், நீலகிரி வாழ் பறவைகள் காணப்படுகின்றன. வனத்துறை மூலம் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

இதையொட்டி நேற்று ஊட்டியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அலுவலக அரங்கில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடந்தது.இதில் நீலகிரி வனக்கோட்ட அலுவலர் சச்சின் பேசும்போது, பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் பாதுகாப்பாக ஈடுபட வேண்டும். தொலைநோக்கி மூலம் பார்க்கும் பறவைகள், நேரில் பார்க்கும் பறவைகளை அடையாளம் காண நன்கு தெரிந்த நபர் மற்றும் அதற்கான புத்தகத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றார். இதில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். 

பின்னர் வனக்கோட்ட அலுவலர் சச்சின் நிருபர்களிடம் கூறும் போது, நீலகிரியில் 21 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பிரித்து அனுப்பப்படுகின்றனர். 

கணக்கெடுப்பின் மூலம் பதிவு செய்யப்படும் விவரங்கள் சென்னையில் உள்ள வனத்துறை தலைமையிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.கடநாடு பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராக்களில் புலி உருவம் பதிவானால், சம்பந்தப்பட்ட புலியை அடையாளம் கண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஊட்டி வடக்கு வனச்சரகத் துக்கு உட்பட்ட காமராஜ் சாகர் அணை, எர்த்தன் அணை, டை கர்ஹில் அணை, மார்லிமந்து அணை, ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு அணை, ஊட்டி ஏரி, பைக்காரா, முக்கூருத்தி, கிளன்மார்கன், அப்பர்பவானி, ரேலியா அணைகள், தெப்பக்காடு, தொரப்பள்ளி ஆறு பகுதிகள், மசினகுடி ஏரி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட 21 நீர்நிலைகளில் நீலகிரி வாழ் பறவைகள், இடம்பெயர்ந்து வந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது . இதற்காக 21 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

Similar News