உள்ளூர் செய்திகள்
மதுரை புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

22-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

Published On 2022-02-12 19:07 IST   |   Update On 2022-02-12 19:07:00 IST
மதுரை மாவட்டத்தில் 22-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
மதுரை

மதுரை மாவட்டத்தில் 22-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கியூ வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் 1016 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நேர நிலவரப்படி 7,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

பொதுமக்கள் வருகை சற்று குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும் சுகாதார ஊழியர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 86 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 55 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டு உள்ளது.” என்று தெரிவித்து உள்ளார்.

Similar News