உள்ளூர் செய்திகள்
பறக்கும் படை சோதனை - நீலகிரியில் ரூ.39 லட்சம் சிக்கியது
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந்தேதி நடக்கிறது.
ஊட்டி:
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ந்தேதி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வேட்பாளர்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் 45 பறக்கும் படைகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் 15 குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் இந்த 45 பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.39,29,550 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அரசு கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களை காண்பிப்பவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது.