உள்ளூர் செய்திகள்
எந்திரங்கள் ஒதுக்கும் பணி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது

நீலகிரியில் 2-ம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

Published On 2022-02-09 16:02 IST   |   Update On 2022-02-09 16:02:00 IST
எந்திரங்கள் ஒதுக்கும் பணி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 2-ம் கட்டமாக குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் பார்வையாளர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர்  ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ்   தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ்  கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே கடந்த மாதம் 5-ந் தேதி நடைபெற்ற முதல் குலுக்கலில் 409 வாக்குப்பதிவு கருவி மற்றும் 409 கட்டுப்பாட்டு கருவி, கூடுதலாக 20 சதவீதம் என 495 வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்தது.  தற்போது, கேத்தி, பிக்கட்டி மற்றும் அதிகரட்டி பேரூராட்சிக்கான வார்டு உறுப்பினர் தேர்தலில் 3 நபர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்கள். 

இதனை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 491 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் 1 ரிசர்வேசன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்) குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றது. 

இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆட்சேப னைகள் ஏதும் தெரிவிக்காத நிலையில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். 

வருகிற 10-ந் தேதி  நடைபெற உள்ள 3-வது குலுக்கல் முறையில் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவ லர்கள் தலைமை யிலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முன்னிலையில் நடைபெற்று, வாக்குச்சாவடிகள் வாரியாக  பிரித்து அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வை யாளர்கள் ஆகி யோர்களுடன் தேர்தல் விதிமுறைகள் பின்பற்று வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில், தேர்தல் ஆணை யத்தால் வழங்கப்பட்ட அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர் சினி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஜென்மம் நிலங்கள்)  குணசேகரன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர்  சரவணக்கண்ணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  இப்ராகிம்ஷா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்  தனப்பிரியா (பொது),  சீனிவாசன் (நகர்புற உள்ளாட்சி தேர்தல்), அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

Similar News