உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நீலகிரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 31 லட்சம் பறிமுதல்

Published On 2022-02-08 16:09 IST   |   Update On 2022-02-08 16:09:00 IST
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 31 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக நேற்று வரை ரூ. 31 லட்சத்து 29ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்தி வரும் சோதனையில் சனிக்கிழமை காலை வரை ரூ. 20 லட்சத்து 88ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது, ஞாயிற்றுக்கிழமை மேலும் ரூ. 2 லட்சத்து 3 ஆயிரமும், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8 லட்சத்து 38 ஆயிரத்து 100 என இதுவரை ரூ. 31 லட்சத்து 29ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கூடலூர்& ஊட்டி சாலையில் நடுவட்டம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையின் போது ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.

நடுவட்டம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலு வலர் ரமேஷ் தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, சைபுதீன் என்பவர் உரிய ஆவணங் களின்றி ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 600 பணம் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பறக்கும் படையினர் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து நடுவட்டம் பேரூராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர்.பிரதீப்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News