உள்ளூர் செய்திகள்
கைப்பற்றப்பட்ட சாராய ஊறல்.

ஏற்காடு மலை பகுதியில் கள்ளச் சாராய ஊறல் அழிப்பு

Published On 2022-01-30 07:58 GMT   |   Update On 2022-01-30 07:58 GMT
ஏற்காடு மலை பகுதியில் கள்ளச் சாராய ஊறல்களை போலீசார் அளித்தனர்.
ஏற்காடு:

ஏற்காட்டில் கடந்த சில மாதங்களாக கள்ளச் சாராயம் அதிக அளவில் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சேலம் டி.எஸ்.பி. தையல் நாயகி தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில் பல இடங்களில் கள்ளச் சாராயம் கண்டு பிடிக்கப்பட்டு அழித்தும் வருகின்றனர்.

நேற்று ஏற்காடு குண்டூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) என்பவர் குண்டூர் வனபகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக டி.எஸ்.பி. தையல் நாயகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து  ஏற்காடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமையிலான போலீசார் குண்டூர் வன பகுதியில் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 லிட்டர் சாராயம் ஊறலை கைப்பற்றினர்.

பின்னர் அந்த சாராய ஊறல்  போலீசார் முன்னிலையில் அழிக்கப்பட்டது. பாலமுருகன் தலைமறைவாகி விட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News