உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் முகாம்

Published On 2022-01-23 13:23 IST   |   Update On 2022-01-23 13:23:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாளை முதல் பொது மாறுதல் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 24.01.2022 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 

பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி 2021&2022ம் ஆண்டிற்கான பொதுமாறுதல், பதவி உயர்வு, பணிநிரவல் கலந்தாய்வு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்க்காணும் பள்ளியில் நடைபெறவுள்ளது.

பலந்தாய்வுக்கான ஆவணங்களுடன் அனைத்து வகை ஆசிரியர்களும் கலந்தாய்வில் அவர்களுக்கு உரிய தேதிகளில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக்கல்வி&தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு கலந்தாய்வானது புதுக்கோட்டை, பேராங்குளம் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 27.01.2022 முதல் 23.02.2022 வரையிலும் முற்பகல் எனில் 9.00 மணி, பிற்பகல் எனில் 1.00 மணி ஆகும். 

பள்ளிக்கல்வி&உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளுக்கு கலந்தாய்வானது புதுக்கோட்டை, அரசுத் தேர்வுக்கூடம் பிரகதாம்பாள் அரசு மேநிப வளாகத்தில் 24.01.2022 முதல் 23.02.2022 வரையிலும் முற்பகல் எனில் 9.00 மணி, பிற்பகல் எனில் 1.00 மணி ஆகும். 

ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Similar News