உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாள் மூடல்

Published On 2022-01-07 07:24 IST   |   Update On 2022-01-07 07:24:00 IST
தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை :

டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற ‘பார்’களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த மாதத்தில் 4 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News