செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை தொடர்ந்து பெய்வதால் கொளத்தூர் பகுதியில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Published On 2021-11-26 09:46 GMT   |   Update On 2021-11-26 13:21 GMT
தொடர்ந்து மழை பெய்ததால் நகரில் மீண்டும் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோட்டையில் இருந்து புளியந்தோப்பு பகுதிக்கு சென்றார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகரிலும் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்றிரவு பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு ஏற்கனவே
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் நகரில் மீண்டும் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோட்டையில் இருந்து புளியந்தோப்பு பகுதிக்கு சென்றார்.

அங்கு மழைநீர் வடிகால் வசதியை பார்வையிட்ட பிறகு கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். அங்கு ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலப்பணிகளை நடந்து சென்று பார்வையிட்டார்.

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

அதன்பிறகு கொளத்தூர் ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


Tags:    

Similar News