செய்திகள்
கைது

பாரிமுனை மளிகை கடையில் ரூ.1½ கோடி மோசடி: 2 பெண்கள் கைது

Published On 2021-11-18 06:01 GMT   |   Update On 2021-11-18 06:01 GMT
சென்னை பாரிமுனையில் மளிகை கடையில் ரூ.1½ கோடி பண மோசடி தொடர்பான வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:

சென்னை பாரிமுனையில் பாண்டி என்பவர் மளிகை கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த கடையில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வேலை செய்து வந்தார். இவர் கடையின் முழு பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வேல்முருகன் தனது வங்கி கணக்கில் செலுத்தியதுடன் தனது மனைவி பூர்ணிமா மற்றும் அவரது தம்பி, மைத்துனி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ரூ.1½ கோடி பணத்தை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வேல்முருகன் மனைவி பூர்ணிமா மற்றும் இன்னொரு பெண்ணான வினோதா ஆகியோரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News