செய்திகள்
கடைகள் அடைப்பு

முழு அடைப்பு எதிரொலி: கடலூர்-புதுவைக்கு தனியார் பஸ்கள் ஓடவில்லை

Published On 2021-09-27 05:11 GMT   |   Update On 2021-09-27 05:11 GMT
கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் அரசு பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கடலூர்:

மத்திய அரசின் வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 1 ஆண்டாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்துக்கு வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் ஆதரவு அளிக்குமாறு கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் துண்டுபிரசுரம் வழங்கி ஆதரவு கேட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு பெரும்பான்மையான பஸ் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து இன்று பஸ்களை இயக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடலூரில் இருந்து புதுவைக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் முழுமையாக இயங்காததால் பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லமுடியாமல் அவதியடைந்தனர். மேலும் ஒருசில இடங்களில் பஸ்சுக்காக பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் அரசு பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுவை செல்லும் பயணிகள் அரசு பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏறினர்.

Tags:    

Similar News