சினிமா செய்திகள்
கேரள மாநில சிறந்த நடிகர் விருது பெற்ற மம்மூட்டி.. எந்த படத்துக்கு தெரியுமா?
- பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருதுகள் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று குடியரசு தினத்தன்று முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை வழங்கினார்.
பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.
அதே சமயம், பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் மமூட்டி சிறந்த நடிகருக்கான மாநில விருதை பெறுகிறார்.
இது மம்மூட்டி பெற்றுள்ள 7-வது மாநில விருதாகும். 1984, 1989, 1993, 2004 மற்றும் 2009,2023 ம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை மம்மூட்டி வென்றுள்ளார்.