செய்திகள்
வேதாரண்யம் அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தற்கொலை
வேதாரண்யம் அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் வடமலை மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45) கொத்தனார். மனைவி இறந்து விட்ட வேதனையில் இருந்து வந்த ராஜ்குமார் விஷம் குடித்தார். திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.