செய்திகள்
அடரியில் பா.ஜனதா வேட்பாளர் பெரியசாமிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.

திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பெரியசாமிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் பிரசாரம்

Published On 2021-03-25 19:44 IST   |   Update On 2021-03-25 19:44:00 IST
திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பெரியசாமிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் பிரசாரம் செய்தார்.
ராமநத்தம்:

திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக பெரியசாமி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ராமநத்தம் அடுத்த அடரியில் திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பெரியசாமிக்கு ஆதரவாக, திரைப்பட நடிகையும், பா.ஜனதா மாநில கலை மற்றும் கலாசார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம், தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், திட்டக்குடி தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருப்பது வருத்தத்துக்குரியது. அதனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவமனை, தரமான பள்ளி கல்லூரி மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்படும். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து பெரியசாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பா.ம.க. வடக்குஒன்றிய செயலாளர் கோபி, பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் நரேந்திரன், மங்களூர் மேற்கு ஒன்றிய தலைவர் சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News