செய்திகள்
காட்டுமன்னார்கோவில் தொகுதி வி.சி.க. வேட்பாளர் சிந்தனை செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பு
காட்டுமன்னார்கோவில் தொகுதி வி.சி.க. வேட்பாளர் சிந்தனை செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் போட்டியிடுகிறார். இவர் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சன் கொல்லை, கொண்டாயிருப்பு, அல்லியூர், சிறுகாட்டூர், ஆச்சாள்புரம், எய்யலூர், ஈச்சம்பூண்டி, பல்வாய் கண்டன், முட்டம், மோவூர், ஆயங்குடி உள்ளிட்ட 20 கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று, பானை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து எய்யலூரில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேட்பாளர் சிந்தனைச் செல்வன் அங்கிருந்த மணமக்கள், அவர்களின் உறவினர்களிடம் வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் சண்முகம், அவைத் தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் கணேசமூர்த்தி, நிர்வாகிகள் கஞ்சன் கொல்லை வெங்கடேசன், புகழேந்தி சதானந்தன், ராமானுஜம், வி.சி.க. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன், விவசாய அணி மாநில செயலாளர் அக்ரி பசுமை வளவன், தொகுதி செயலாளர் மணவாளன், துணை செயலாளர் ராவணன், ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், நிர்வாகிகள் வக்கீல் ராதாகிருஷ்ணன், ரவி கஸ்பா பாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரகாஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முகமது நுவமான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.