செய்திகள்
கடலூருக்கு அமைச்சர் சம்பத் என்னென்ன செய்துள்ளார்? முக ஸ்டாலின் கேள்வி
கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் எம்சி சம்பத் என்னென்ன பணிகள் செய்துள்ளார் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் திமுகவின் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் முக ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக ஆட்சியில் கடலூர் மாவட்டம் கவனிக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் சிதம்பரம் கோயிலில் மழைநீர் தேங்கியது. முதல்வருக்கு மக்களைப் பற்றிய அன்பு இல்லை, தொலைநோக்குப் பார்வை இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.