செய்திகள்
மரணம்

வேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

Published On 2020-12-08 18:12 IST   |   Update On 2020-12-08 18:12:00 IST
வேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:

வேலூரை அடுத்த சோழவரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 49), விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். தண்ணீர் மோட்டாரை இயங்கி விட்டு நிலத்துக்கு வேகமாக செல்ல முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் குமார் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட குடும்பத்தினர் உடனடியாக வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் குமாரை பிணமாக மீட்டனர். தகவலறிந்த அரியூர் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News