செய்திகள்
ஆரணி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
ஆரணி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை (வயது 54). இவரது கணவர் சண்முகம் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதற்கிடையில் இவரது மகளுக்கு வந்தவாசியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அந்த பெண்ணும் சமீபத்தில் இறந்து விட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பூங்கோதை தற்கொலை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். நீண்ட நேரமாகியும் தாய் காணவில்லை என மகன் சீனுவாசன் தேடிப்பார்த்து நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் பூங்கோதை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் பூங்கோதை இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.