செய்திகள்
கொலை

ஓசூர் அருகே பெண் கொடூர கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-10-29 15:11 IST   |   Update On 2020-10-29 15:11:00 IST
ஓசூர் அருகே பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உளிவீரனப்பள்ளி அடுத்துள்ளது கப்பக்கல் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தாசப்பா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி நஞ்சம்மா (வயது 60). ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வழக்கம் போல் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார்.

பின்னர் வெளியில் சென்ற நஞ்சம்மா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது இரவு 9 மணி அளவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நஞ்சம்மா கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நஞ்சம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிர்வாண நிலையில் உடல் கிடந்ததால் நஞ்சம்மாவை பாலியல் பலாத்காரம் செய்து மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News