செய்திகள்
போலீசாருக்கு சளி பரிசோதனை செய்த காட்சி.

காட்பாடியில் போலீசாருக்கு சளி பரிசோதனை

Published On 2020-08-30 20:02 IST   |   Update On 2020-08-30 20:02:00 IST
கொரோனா தொற்று காரணமாக காட்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 110 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
காட்பாடி:

காட்பாடி உள் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் காட்பாடி, விருதம்பட்டு, திருவலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு சளி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காட்பாடி டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமுக்கு காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார ஊழியர்கள் போலீசாருக்கு சளி பரிசோதனை செய்தனர். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 110 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக விருதம்பட்டு போலீஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் போலீஸ் நிலைய வளாகத்தில் பந்தல் அமைத்து போலீசார் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகின்றனர்.

Similar News