செய்திகள்
மனு

குடியாத்தம் சாமுண்டிபுரம் கிராம மக்கள் மயானம் கேட்டு அதிகாரிகளிடம் மனு

Published On 2020-08-29 20:05 IST   |   Update On 2020-08-29 20:05:00 IST
அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி நிரந்தரமாக சாலை வசதியுடன் மயானம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் செட்டிகுப்பம் ஊராட்சி சாமுண்டிபுரம், ஓட்டேரிகோடி, உள்ளி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் இறப்பவர்களை நீண்டகாலமாக நிரந்தர மயானம் இல்லாத காரணத்தால் ஓட்டேரி மதகு தண்ணீர் செல்லும் கால்வாய் ஓரம் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வந்துள்ளனர்.

தற்போது அந்த கால்வாயின் ஒருபுறம் ரோடு போடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இறந்தவர்களின் உடல்களை குறுகிய இடத்தில் அடக்கம் செய்யும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அந்த பகுதியில் அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி நிரந்தரமாக சாலை வசதியுடன் மயானம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Similar News