செய்திகள்
வேலூர் கொணவட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது - 1¼ கிலோ பறிமுதல்
வேலூர் கொணவட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வியாபாரியை கைது செய்த போலீசார் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வேலூர் கொணவட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை கொணவட்டம் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள திருமண மண்டபம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த கருகம்புத்தூர் ஹாஜிபுராவை சேர்ந்த மஸ்தான் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மஸ்தான் ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவர் மீண்டும் அவர் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.