செய்திகள்
களப்பணியாளர்களுக்கு துணிமணிகள் வழங்கப்பட்டது.

நகராட்சி களப்பணியாளர்களுக்கு துணிமணிகள்

Published On 2020-08-27 19:18 IST   |   Update On 2020-08-27 19:18:00 IST
குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி களப்பணியாளர்களுக்கு துணிமணிகள், கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது.
குடியாத்தம்:

கொரோனா காலங்களில் குடியாத்தம் நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நகராட்சி களப்பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் கையுறைகள், முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது, நகராட்சி வளாகத்தில் சங்கத் தலைவர் (தேர்வு) ஏ.மேகராஜ் குடும்பத்தின் சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக செயலாளர் என்.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் (தேர்வு) ஜே.கே. என்.பழனி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டு 200 களப் பணியாளர்களுக்கு துணிமணிகள், கையுறைகள் முககவசம் ஆகியவற்றை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் ஜெ.தமிழ்செல்வன், சமுதாயப் பணி இயக்குனர் வி.என்.அண்ணாமலை, நிர்வாகிகள் மதியழகன், அன்பரசு, சேட்டு ,சந்திரன் உள்பட நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Similar News