செய்திகள்
பள்ளிகொண்டா பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கேரள மூலிகைச்சாறு
பள்ளிகொண்டா பேரூராட்சியில் பணிபுரியம் ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட 60 பேருக்கு கேரள மூலிகை சாறு வழங்கப்பட்டது.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆய்வு செய்தார். அப்போது பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் உள்பட 60பேருக்கு தலா 4 பாட்டில்கள் அடங்கிய கேரள மூலிகை சாறு வழங்கினார். இதில் செயல் அலுவலர் மலர்மாறன் மற்றும் அலுவலக பதிவுத்துறை அலுவலர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஒடுகத்துார் பேரூராட்சியில் பணிபுரியம் ஊழியர்கள் மற்றும் டெங்கு ஓழிப்பு பணியாளர்கள் உள்பட 60 பேருக்கு கேரள மூலிகை சாறு வழங்கப்பட்டது. இதனை ஒடுகத்தூர் பேரூராட்சி செயல்அலுவலர் கோபிநாத் இளநிலை உதவியாளர் ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.