செய்திகள்
செம்மரக்கட்டைகள்

காட்பாடியில் ரவுடி ஜானி கூட்டாளி பதுக்கிய 1 டன் செம்மரம் பறிமுதல்

Published On 2020-05-18 18:05 IST   |   Update On 2020-05-18 18:05:00 IST
காட்பாடி விருதம்பட்டில் பிரபல ரவுடி ஜானி கூட்டாளி பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:

வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் மீது கொலை, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வேலூரில் பதுங்கியிருந்த ராஜாவை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் செம்மர கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் ராஜா காட்பாடி விருதம்பட்டு அரிஹிந்த்நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் செம்மரங்களை பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார்.

இதுபற்றி காட்பாடி டி.எஸ்.பி துரைப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தலைமையில் போலீசார் ராஜா வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அவற்றை விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். தொடர்ந்து ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News