செய்திகள்
தட்டப்பாறையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்
கிராம மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு தட்டப்பாறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் 100 பேர் ஒரே இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் உள்ள போர்வெல்களில் மோட்டார் மற்றும் பைப்புகள் பழுதடைந்ததால் கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பைப்கள் சரி செய்யப்படாததால் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு தட்டப்பாறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழுதடைந்த மோட்டார் மற்றும் பைப்புகளை உடனடியாக சீர் செய்வதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் 100 பேர் ஒரே இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.