செய்திகள்
குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்.

காட்பாடியில் குழந்தை வைத்து பிச்சை எடுத்த பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு

Published On 2020-01-09 16:37 GMT   |   Update On 2020-01-09 16:37 GMT
காட்பாடியில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த ஆந்திர பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்:

வேலூர் காட்பாடி பகுதியில் ஆந்திராவை சேர்ந்த பெண்கள் கை குழந்தைகளுடன் பிச்சை எடுத்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலில் வாடிய முகத்துடன் குழந்தைகளை வைத்து கொண்டு பிச்சை கேட்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு அவர்கள் வைத்திருப்பது சொந்த குழந்தைதானா? அல்லது கடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த நிலையில் காட்பாடியில் இன்று குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டம் நடந்தது.

இதனை ஓடைபிள்ளையார் கோவில் அருகே கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

அந்த இடத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவரிடம் கலெக்டர் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் கூறினார்.

குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த மல்லேஸ்வரி என்பது தெரியவந்தது.

அந்த பெண் மற்றும் குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பெண் மற்றும் குழந்தையை காட்பாடி கசத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து இது போன்று குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண்களை பிடித்து ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News