செய்திகள்
கைது

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே தொழிற்சங்கத்தினர் மறியல்- 200 பேர் கைது

Published On 2020-01-08 10:34 GMT   |   Update On 2020-01-08 10:34 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஏஐடியூசி மற்றும் சி.ஐ.டி.யு. ஆகிய தொழிற்சங்க அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் குறைந்தபட்ச ஊதிய தொகையாக ரூ.18 ஆயிரம் வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழையபென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News