செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை

சென்னை கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

Published On 2019-12-24 14:33 IST   |   Update On 2019-12-24 14:33:00 IST
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் நாளை (25-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் விசே‌ஷ பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் நாளை (25-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் விசே‌ஷ பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது. மேலும் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், மின்விளக்கு அலங்காரம் என்று கிறிஸ்து மஸ் பண்டிகை களைகட்டி உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசே‌ஷ பிரார்தனை நடைபெறும் விவரம் வருமாறு:-

அம்பத்தூர் டிவைன் மேரி ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணி மற்றும் நாளை காலை 7.30 மணி ஆகிய நேரங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

அத்திப்பட்டு செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

அயனாவரம் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

புதுச்சேரி கோரிமேடு செயின்ட் மேரீஸ் ஆலயத் தில் இன்று 10 மணி, நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

கீழ்கட்டளை சேக்ரட் ஹார்ட் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 8 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

மொபைஸ் பைந்தர் ஹோலிகிராஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 8.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

நீலாங்கரை செயின்ட் கேமலம் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

நிறுத்தச்சேரி செயின்ட் ஆண்டனிஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 8 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பெரம்பூர் செயின்ட் ஜோசப் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பூந்தமல்லி கிரைஸ்ட் த கிங் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை 7 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

கோடம்பாக்கம் செயின்ட் அல்போன்சா ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை 8.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

ஆவடி செயின்ட் பீட்டர்ஸ் ஆலயத்தில் இன்று இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

கோவில்பதாகை செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

எர்ணாவூர் செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

ஓட்டேரி செயின்ட் சபாஸ்டின் ஆலயத்தில் இன்று இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பட்டாபிராம் இன்பேண்ட் ஜீசஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

புதுச்சேரி ஜெயா நகர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பொழிச்சலூர் செயின்ட் அல்போன்ஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

செயின்ட் தாமஸ் மவுண்ட் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

திருவொற்றியூர் செயின்ட் ஜூடு ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

வளசரவாக்கம் லிட்டில் பிளவர் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

வேளச்சேரி செயின்ட் மதர் தெரசா ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

மயிலாப்பூர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

ஓசூர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

வேலூர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் நாளை காலை 8 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

சிந்தாமணி டிவைன் மேரி ஆலயத்தில் நாளை காலை 11 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி. செயின்ட் ஜோசப் ஆலயத்தில் நாளை காலை 8.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.



பிராட்வே செயின்ட் தாமஸ் கத்தீட்ரல் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

கோயம்பேடு செயின்ட் பீட்டர் அன்டு செயின்ட் பால் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

தாம்பரம் மார்கிரகோரி யஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

சேத்துப்பட்டு செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

புழுதிவாக்கம் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பாடி செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

ஈஞ்சம்பாக்கம் செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை காலை 6 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

பெரம்பூர் செயின்ட் விகோரியஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

திருவொற்றியூர் செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

ஆவடி செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் நாளை அதி காலை 4.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

ஆவடி ராமலிங்கபுரம் செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

மயிலாப்பூர் சேப்பல் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

யாக்கோபாயா சபை யின் அனைத்து ஆலயத்திலும் இன்று மாலை 6 மணி முதல் விசே‌ஷ பிரார்த்தனை. 8 மணிக்கு தீ ஜுவாலா திருப்பலி, 9 மணிக்கு விசே‌ஷ பிரார்த்தனை, நள்ளிரவு 1.15 மணிக்கு கிறிஸ்துமஸ் செய்தி.

இந்த பிரார்த்தனைகள் நடைபெறும் ஆலயங்கள் வருமாறு:-

ஆவடி செயின்ட் ஜார்ஜ் ஆலயம், இரட்டை ஏரி செயின்ட் மேரீஸ் ஆலயம், அண்ணாநகர் செயின்ட் தாமஸ் ஆலயம், பெரும் பாக்கம் செயின்ட் கிரகோரி யஸ் ஆலயம், கேளம்பாக்கம் செயின்ட் மேரீஸ் ஆலயம், பல்லாவரம் செயின்ட் மேரீஸ் ஆலயம், புதுச்சேரி செயின்ட் ஸ்டீபன்ஸ் ஆலயம்.

சேத்துப்பட்டு மெட்ராஸ் மார்தோமா ஆலயத்தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி. காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலி.

அண்ணாநகர் ஜெரு சலேம் ஆலயத்தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

அடையாறு செயின்ட் பால் ஆலயத்தில் நாளை காலை 6 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

ஆவடி செயின்ட் ஆண்ட் ரூஸ் ஆலயத்தில் நாளை காலை 6.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.

பாடி பெத்தேல் ஆலயத் தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பழவந்தாங்கல் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயத்தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

திருவொற்றியூர் வட சென்னை மார்தோமா ஆலயத்தில் நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

தாம்பரம் இம்மானுவேல் ஆலயத்தில் நாளை காலை 6 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பாடி செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 7.30 மணிக்கும், நள்ளிரவும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் செய்தி, பவனி நடைபெறும். பாதிரியார் பிலிப் புலிப்பரா பரிசுகளை வழங்குகிறார். நங்கநல்லூர் ஆலயத்திலும் இதே நேரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Similar News