செய்திகள்
சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன்

சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன் - அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வெளியே எடுத்தனர்

Published On 2019-11-14 04:04 GMT   |   Update On 2019-11-14 04:04 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கிணற்றில் குளித்த சிறுவனின் மூக்கில் சிக்கிய மீனை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார் (வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் அருள்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தான். அப்போது அருள்குமாரின் மூக்கினுள் ஒரு குட்டி மீன் நுழைந்து சிக்கிக்கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அருள்குமார் துடித்தான். பெற்றோர். அக்கம்பக்கத்தினர் முயற்சி செய்தும் மீனை வெளியே எடுக்க முடியவில்லை.

அதனால் சிறுவன் அருள்குமாரை உடனடியாக அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் கதிர்வேல், மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து, மாணவனின் மூக்கில் உயிருடன் இருந்த ‘சிலேபி’ வகையை சேர்ந்த குட்டி மீனை வெளியே எடுத்தார். இதன் பின்னர் சிறுவன் அருள்குமார் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். 
Tags:    

Similar News