செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த்.

மழைநீரை சேகரிக்க ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி

Published On 2019-06-29 01:27 IST   |   Update On 2019-06-29 01:27:00 IST
மழை வருவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் ஏரிகளை தூர் வார வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஆலந்தூர்:

நடிகர் ரஜினிகாந்த், மும்பையில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள். நடிகர் சங்க தேர்தலில் வாக்குசீட்டு உரிய நேரத்தில் எனக்கு கிடைக்கவில்லை. வாக்களிக்காதது எனக்கு வருத்தம்தான். ஏதோ தவறு நடந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News