செய்திகள்

கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள் - கர்நாடக பெண் புகார் மனு

Published On 2019-03-25 17:33 IST   |   Update On 2019-03-25 17:33:00 IST
கணவருடன் தன்னை சேர்த்து வைக்ககோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கர்நாடக பெண் புகார் மனு அளித்துள்ளார்.
ஈரோடு:

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35). இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

எனக்கும் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் டெலிபோன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லக்‌ஷனா, லட்சுமணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது என் குழந்தைகள் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் என் கணவரது வீட்டார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் குழந்தைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை என்னோடு சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

பின்னர் மனுவை அனிதா கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டார். #tamilnews
Tags:    

Similar News