செய்திகள்

திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-03-12 17:01 IST   |   Update On 2019-03-12 17:01:00 IST
திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலியை சேர்ந்தவர் பஸ்வராஜ். இவரது மனைவி சுமித்ரா (வயது 25). இந்த தம்பதிக்கு 1 மகன். 1மகள் உள்ளனர்.

இந்நிலையில் பஸ்வராஜ் சுமித்ராவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்றும் அவரது தாய் வீட்டில் பணம் வாங்கி வருமாறு தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சுமித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுமித்ராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் செய்தனர்.

திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News