செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே வாலிபர் கொலை

Published On 2019-02-26 17:20 IST   |   Update On 2019-02-26 17:20:00 IST
அருப்புக்கோட்டை அருகே வாலிபரை கொலை செய்து கல்குவாரியில் வீசி சென்றவர்கள்யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டியில் உள்ள காட்டுப் பகுதியில் கல்குவாரி உள்ளது. இங்குள்ள 200 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து பள்ளத்தில் கிடந்த பிணத்தை மீட்டனர்.

பிணமாக கிடந்தவர் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்கவராக உள்ளார். அவரது முகம் சிதைந்து ரத்தக்காயங்களுடன் இருப்பதால் அவர் யார் என்பதில் அடையாளம் காண முடியவில்லை.

கொலையாளிகள் வாலிபரை கொலை செய்து விட்டு கல்குவாரியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையானவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News