செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கைதான தொழிலாளி சிறையில் அடைப்பு

Published On 2019-02-06 16:15 IST   |   Update On 2019-02-06 16:15:00 IST
தர்மபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அழகர் (வயது 37), கூலித் தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் அழகரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அழகரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News